திங்கள், 13 மே, 2013

வன்னி அரசு-வின் ஜாதி மோதலை தூண்டும் அபாண்டமான பொய் பரப்புரை செய்திக்கு மறுப்பு அறிக்கை


13 May 2013
க.வேலாயுதபுரம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு-வின் அபாண்டமான பொய் பரப்புரை செய்திக்கு க.வேலாயுதபுரம் கிராம ரெட்டியார் சமுதாய மக்கள் சார்பாக மறுப்பு அறிக்கை..

கடந்த 8-5-2013  அன்று எங்கள் கிராமத்திர்க்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு அறிக்கையில் உள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க விரும்புகிறோம்..  இணைய தள செய்தி தளங்களில் இந்த குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருக்கிறது..

குற்றச்சாட்டு 1:  
அருந்ததிய இனப்பெண் சுபா-வை ரெட்டியார் இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்ததால் தற்கொலை செய்துகொண்டார் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்..

விளக்கம் :
உண்மையில் அந்தப்பெண் குடும்ப பிரச்னையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.. அப்போது சமூக நல்லிணத்தை சீர்குழைக்க நினைக்கும் சிலரின் தூண்டுதலால் புகார் அளிக்கப்பட்டது..   கிராமத்தை சேர்ந்த ரெட்டியார் பெண்கள் ஜாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார் என புகார் அளிக்கப்பட்டது.. சில ரெட்டியார் பெண்களை  வன்கொடுமை சட்டத்தில் கைதும் செய்தார்கள்..  அரசாங்கத்திடம் நிவாரணமும் வாங்கிக்கொண்டர்கள் அருந்ததியினர்...  இது நடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. அந்த புகார் பொய் என நீதிமன்றத்தில் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது..  5 வருடங்களுக்கு பின் திடீரென வன்னி அரசு,  ரெட்டியார் இளைஞர்கள் கேலி செய்ததால் தற்கொலை செய்துகொண்டார் என பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்..

குற்றச்சாட்டு 2:
சுபா தற்கொலை வழக்குக்காக கருப்பசாமி என்பவர் போலிஸ், கோர்ட் என சென்றதால் கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்..

விளக்கம் :
சுபா தற்கொலை வழக்கு என்று கோர்ட்டில் முடிவுக்கு வந்துவிட்டது.. அந்த வழக்கே பொய் என்று ஆனபின் கருப்பசாமி மரணத்தில் ரெட்டியார்களை பழிசொல்லி வழக்கில் அவர்களை கோர்த்து விட நினைக்கிறார் வன்னி அரசு..  கருப்பசாமி மரணம் சம்பந்தமாக காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுவருகிறது..  காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.. அருந்ததியினர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருக்கின்றனர்..

குற்றச்சாட்டு 3:
முத்துகிருஷ்ணன் என்பவருக்கு கிடைத்த அஞ்சலக அலுவலக பணியாளர் பணியை ஜாதியை சொல்லி ரெட்டியார்கள் தடுத்ததாக சொல்லி இருக்கிறார்..

விளக்கம் :
6 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரின் கிராம அஞ்சல் அலுவலகத்தில் பகுதி நேர ஊதியராக பணியாற்றியவர் எங்கள் சமூகத்தைச்  சார்ந்த மாற்றுத்  திறனாளி முத்துலட்சுமி என்ற பெண். அவர் முதுநிலை பட்டம் பெற்றவர். அவரின் தந்தை முன்னால் இராணுவவீரர்..  இந்த வேலையை நிரந்தரமாக்க கோரிய சமயத்தில்,  அவரிடம் அஞ்சல் துறையில் பணியாற்றிய வெறொரு ஊரை சேர்ந்த  தலித் இனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு படிவத்தை கொண்டுவந்து உங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டுமென்றால் இப்பொழுதிருக்கும் தற்காலிக பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என நயவஞ்சமாக பேசி  கையெழுத்தை பெற்று சென்று அவருக்கு வேண்டப்பட்ட வேறொரு ஊரை சேர்ந்த தலித் நபரை  (இவர் அருந்ததியினத்தை சேர்ந்தவர் அல்ல)  அப்பணியில் அமர்த்த திட்டமிட்டார். இதனை சில நாட்கள் கழித்து அறிந்த எம் மக்கள் அஞ்சலக அதிகாரிகளிடம் பேசி அப்பெண்ணையே மீண்டும் பணியிலமர்த்த முயற்சி செய்தனர்.இதனை அறிந்த அந்த தலித் சமுதாய ஊழியர்  எங்கள் ஊரில்  பிரிவினையை  உண்டாக்கும்  நோக்கத்தோடு, சுப்பிரமணி என்பவரின் மகன் முத்துகிருஷ்ணனை அப்பணியில் சேர்த்து விடுவதாக கூறி அவரையும் ஏமாற்றி , தலித் சமூக அஞ்சலக ஊழியர் அவரின்  உறவினரை பணியில்   அமர்த்தும் நோக்கத்தோடும்  நயவஞ்சமாக  திட்டமிட்டு   அதனை செயல்படுத்தி காட்டி இரு சமூக மக்களிடையே பிரிவினையை உண்டாக்கினார். இதனை அறியாத அருந்ததிய இன மக்கள் ரெட்டியார்கள் தான் முத்து கிருஷ்ணனை அப்பணியில் சேரவிடாமல் தடுத்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டார்.   

குற்றச்சாட்டு 4:
ரேசன் கடை ரெட்டியார்கள் தெருவிர்க்குள் உள்ளது..  ஆகையால்  அருந்ததியினர் பிரச்னையை சந்தித்துவருகிறார்கள்.. 5-ம் வகுப்புக்கு மேல் அருந்ததியினர் படிக்கமுடியாது..

விளக்கம் :
கழுகுமலை to கயத்தார் செல்லும் சாலையின் இடதுபுரம் ஊருக்குள் உள்ளே நுழையும் சாலையின்  ஓரத்திலேயே ரேசன்கடை உள்ளது.. ரெட்டியார் தெருவுக்குள் இல்லை.. வன்னி அரசின் அறிக்கையிலேயே முத்துகிருஷ்ணன் என்பவர் படித்தவர் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. அருந்ததியினர் மேற்படிப்பு படித்து இருக்கின்றனர், இப்போதும் படிக்கின்றனர்... உள்ளங்கை நெல்லிக்கனி..

குற்றச்சாட்டு 5:
நாதஸ்வரவித்வான் முத்தையா-வை இழிவு படுத்தியதாக சொல்லி இருக்கிறார்..

விளக்கம் :
ஏறக்குறைய 6 வருடங்களாக அருந்ததியின மக்களோடு தொடர்பில் இல்லாமல் இருந்துவரும் ரெட்டியார் மக்கள் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லுகிறார்.. சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வின்போது கூட அடிப்படை வசதிகள் மட்டுமே குடிநீர் போன்ற சில குறைகள் இருப்பதாக மட்டுமே அருந்ததியின மக்கள் சொல்லி இருக்கிறார்கள்..  அது உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட்டுவிட்டது..  

குற்றச்சாட்டு 6:
அருந்ததியின குடியிருப்பை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது..

விளக்கம் :
அருந்ததியின குடியிருப்பை சுற்றி இருக்கக்கூடிய விளை நிலங்களில் பயிர்களை ஆடு, மாடுகளை விட்டு தொடர்ந்து சேதப்படுத்தியதால் அந்த விவசாய நில உரிமையாளர்கள் அவர்கள் இடத்தில் வேலிகளை அமைத்திருந்தார்கள்.. இந்த வேலிகளை அகற்ற முழுமூச்சாக அருந்ததியின மக்கள் அதிகாரிகளுக்கும், ஆணையங்களுக்கும் நெருக்கடி கொடுத்தார்கள்.. நிலத்தின் பாதுகாப்புக்காக போடப்பட்ட வேலிகளை தீண்டாமை வேலிகள் என பொய்யாக பரப்புரை செய்ததால் நெருக்கடிக்கு ஆளான அதிகாரிகள் வேலியை சில வாரங்களுக்கு முன்பு அகற்றியுள்ளார்கள்..
காலங்காலமாக விவசாயத் தொழில் ஒன்றை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் வேலாயுதபுரம் ரெட்டியார் சமுதாய மக்களின் விளை நிலங்களுக்குள் , வேண்டுமென்றே ஆடு மாடுகளை மேயவிட்டு விவசாய மக்களின் வயிற்றில் அடிப்பது சரியா?
இதன் பிறகு , தங்கள் சொந்த செலவில் தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பாதுகாப்பதற்காக , அந்த சிறு விவசாய மக்கள் தங்கள் நிலத்தில் முள்வேலி அமைத்து கொண்டார்கள் . ஒரு சில சமூக விரோதிகளால் தவறாக இச்செய்தி தீண்டாமை வேலி என்று பரப்பப் பட்டது. இதை தீண்டாமை வேலியாக கருத முடியுமானால் , அவரவர் வீடுகளை சுற்றி பராமரிப்புக்காக போடப்படும் வேலிகள் தீண்டாமை வேலிகளா ? மேலும் அலுவலகங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் அருகில் தலித் சமுதாயத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தால், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் வேலிகளை தீண்டாமை வேலிகளாக கருதலாமா...?
தீண்டாமை வேலி என்று தவறாகப் பரப்பப் படும் செய்திகளனைத்தும் பொய்யான தகவல்கள் என்பதை தகுந்த ஆதாரத்தோடு குறிப்பிடுகிறோம்.
1. திரு கதிர்வேல்சுந்தரம் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டாஎண் 1069ன் புலஎண் 102/8
2. ஜெயராம் ரெட்டியார் மற்றும் கந்தசாமி ரெட்டியார் . இந்த சகோதரர்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண் 758 ன் புல எண் 84 / 1B .
3. ராமலிங்க ரெட்டியார் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டாஎண் 936 ன் புல எண் 102/9.
4. ராமலிங்க ரெட்டியார் அவர்களின் மனைவி லட்சுமியம்மாள் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டா எண் 671 ன் புல எண் 84 / 2A.
இந்த நிலத்தின் விவரங்களை கொண்டு ,இது தீண்டாமை வேலியா அல்லது விளை நில பாதுகாப்பு வேலியா என்பதை அறிந்து கொள்ளவும். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் நில உரிமையாளர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளது..
குற்றச்சாட்டு 7:
முள்வேலி அமைக்க கிராமத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஷ்ட் கட்சிக்காரர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என வன்னி அரசு சொல்லி இருக்கிறார்..
விளக்கம் :
ஒருமுறை இராதாகிருஷ்ணன் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்..  அதுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.. அதன் பின் இராதாகிருஷ்ணன் தேர்தலிலேயே போட்டியிடவில்லை.. பெண்களுக்கான பஞ்சாயத்து உள்ளாட்சி ஒதுக்கீடாக  மாற்றப்பட்டுவிட்டதால் போட்டியிடவில்லை..  முன்பு சொன்ன, சுபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இராதாகிருஷ்ணனின்  மனைவி-யையும்  குற்றவாளியாக சேர்த்து புகார் அளித்து இருந்தனர் அருந்ததியின மக்கள்... பொய்யான வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட ரெட்டியார் சமுதாய பெண்களில் அவரும் ஒருவர்..  அந்த வழக்கு பொய்வழக்கு என்பது கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது  என்பதை முதல் குற்றச்சாட்டு விளக்கத்தில் சொல்லி இருக்கிறோம்..  தேர்தலில் போட்டியிடாமலேயே தோல்வியடைய செய்யப்பட்டார் என கூறுவது எந்த விதத்தில் சரி..
குற்றச்சாட்டு 8 :
ரெட்டியார் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.. இவர்கள் தான் தீண்டாமையை செய்கின்றனர் என்று சொல்லி இருக்கிறார்..
விளக்கம் :  சில மாதங்களுக்கு முன் ரெட்டியார் சமுதாய மாணவிகள் பள்ளி செல்லும் வ்ழியில் வழிமறித்த அருந்ததியின இளைஞர்கள் அவர்களை வழிமறித்து எங்கே படித்துவிட்டு வருகிறீர்களா.. எங்களோடு வாருங்கள் நாங்கள் உங்களுக்கு வேறு பாடம் சொல்லித்தருகிறோம் என சொல்லி தவறாக நடக்க முயற்சித்துள்ளார்கள்..  இது சம்பந்தமாக கழுகுமலை காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அப்போது இனிமேல் நாங்கள் இப்படி நடந்துகொள்ளமாட்டோம் என்று அருந்ததியின இளைஞர்கள் கழுகுமலை காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்துள்ளார்கள். அப்போது காவல்நிலயத்துக்கு மாணவிகளோடு புகார் அளிக்க சென்றவர்களில் பலர் பெயரைத்தான் வன்னி அரசு குறிப்பிட்டு இருக்கிறார்.. பள்ளி மாணவிகளை தொந்தரவு செய்த வழக்குக்கு காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போஸ், சுப்புராஜ், அரிபாலன் ஆகியோரின் கிணற்றில் இருந்த மோட்டார்களை அதன் பின் அருந்ததியின இளைஞர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அது சம்பந்தமாக காவல்துறையில் வழக்குபதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அருந்ததியினர்  கைது செய்யப்பட்டனர்.. 6 வருடங்களுக்கு முன்பு நடந்த அருந்ததியின கோவில் திருவிழா-வின் போது ரெட்டியார் இனப்பெண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி அருவருப்பாக பேசியுள்ளனர். ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என கேட்ட ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது பொய்யான வன்கொடுமை வழக்கை அப்போதே பதிவு செய்தனர்..
குற்றச்சாட்டு 9:
வன்னி அரசு உடன் வந்தவர்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக-வும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு தாக்க முற்பட்டதாகவும் மாலை 5 மணிக்கு ஊருக்குள் உள்ளே சென்றவர்களால் 8 மணிக்கு மேல்தான் வெளியேற முடிந்ததாகவும் சொல்லி இருக்கிறார்..
விளக்கம் :
அன்றைக்கு வேலாயுதபுரம் ஊருக்கு வந்த வன்னி அரசு மற்றும் உடன் வந்தவர்கள் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கைகளை காட்டி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும்விதமாக ஆயுதங்களை காட்டி மிரட்டி, சென்றிருக்கின்றனர்.. இன்றைக்கு இவ்வளவு பேர் என்று நினைக்கிறீர்களா..? இனி 200 வாகனங்களில் வருவோம் உங்கள் ஆண்களை வெட்டிக்கொன்றுவிட்டு உங்களை மானபங்கப்படுத்தாமல் விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு அருந்ததியின மக்கள் பகுதிக்கு சென்றுவிட்டனர்... எழுத முடியாத ஆபாசவார்த்தைகளை சொல்லி இருக்கிறார்கள்..  இதனால் பதட்டம் அடைந்த பெண்கள் ஒன்றுகூடி ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள்.. ஊரின் எல்லையில் இருந்த காவலர்கள், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவர்கள் வந்தனர்.. அதன்பின் கழுகுமலை காவல்நிலையத்தில் வன்னி அரசு உள்ளிட்ட அவரோடு வந்த பலரின் மீது பெண்கள் மீது ஆபாசமாக பேசி தவறாக நடந்துகொள்ள முயற்சித்தல், மிரட்டுதல் போன்ற புகார்கள் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது..  
வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மாணவிகள் மற்றும் ஆண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு மற்றும் அவரோடு வந்த பலர் மீது உரியநடவடிக்கைகள் மேற்க்கொண்டு தென்மாவட்டங்களை ஜாதிய மோதல்களால் துண்டாட நினைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்..

பலமுறை நாங்கள்பாதிக்கப்பட்டிருந்தாலும் மனிதாபிமானம் கருதி  காவல்நிலையத்துக்கு செல்லவில்லை.. அதை எல்லாம் இங்கு எழுதினால் 100 பக்கங்களுக்கு மேல் ஆகும்.. எங்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழில்.. நாங்கள் விவசாயம் தொடர்ந்து செய்வதும், நிலங்களை தரிசாகப்போட்டு வேறு வேலைக்கு செல்வ்தும் ஜாதிய மோதல்களை தூண்டிவிடுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை பொறுத்தே.. கடந்த வருடம் மழை சரியாக இல்லாததால் மிகப்பெரிய நட்டத்தை அடைந்திருக்கிறோம்.. இயற்கையும் வஞ்சிக்கிறது, விளையும் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டால் நாங்கள் என்ன செய்வது..
மனசாட்சியுள்ள நடுநிலையாளர்களை ரெட்டியார் சமுதாய மக்கள் சார்பாக கேட்கிறோம், பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதும், விவசாயத்தை வாழ்வாக கொண்ட மக்களின் வாழ்வை அழிக்கும்விதமாக நடந்துகொள்வதும் அதை ஏன் என்று கேட்டால் வன் கொடுமை சட்டத்தால் பொய் வழக்கு பதிந்து போலிசுக்கும், கோர்ட்டுக்கும் எங்களை அழையவிடுவதும் எந்த வகையில் நியாயம்.. வன்கொடுமைகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதை  ஆயுதமாக பயன்படுத்தி பொய்யான வழக்குகளை பதிந்து எங்கள் வாழ்வை சிதைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா..? வளமான தமிழகத்தை ஒன்றுபட்டு கட்டமைக்க வேண்டிய தருணத்தில் ஜாதிய மோதல்கள் ஏற்படுவது நம் வளர்ச்சியை தடுக்காதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிக்கொள்கிறோம்...
நன்றி,
இப்படிக்கு
க.வேலாயுதபுரம் ரெட்டியார் சமுதாய மக்கள்

கருத்துகள் இல்லை: